வயிற்று வலியால் பெண் விபரீதம்
ஈரோடு:ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வெங்கடாச்சலம்-காஞ்சனமாலா மகள் மாதேஸ்வரி, 43; கடந்த, 2013ல் அருணாசலம் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, 2021ல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவரை இரண்டாவது திருமணம் செய்து வசித்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தார். வயிற்று வலி பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. ஆனாலும் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.