உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த தொட்டம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் சாந்தி, 50; இவரது மகன் சுகுமார். கோவையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த ஒருமாதமாக வேலை அதிக-மாக இருந்ததால் வீட்டுக்கு வர முடியவில்லை. இந்நிலையில் உத்தண்டியூர் பகுதி கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிரேதம் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. பிரே-தத்தை கைப்பற்றி சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். விசாரணையில் தொட்டம்பாளையத்தை சேர்ந்த சாந்தி என தெரியவந்தது. வாய்க்காலில் தவறி விழுந்தாரா? அல்லது தற்-கொலை செய்து கொண்டாரா? என சத்தி போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ