மேலும் செய்திகள்
மனைவி தற்கொலை: கணவன் புகார்
22-Dec-2025
ஈரோடு: சிவகிரி, கொல்லன்கோவில் நந்திவர்மன் தோட்டத்தில் வசிப்-பவர் சக்திவேல், 32. இவர் மனைவி ருத்ரா. சொந்த ஊர் நாகை மாவட்டம் குத்தாலம். தனியார் நிறுவனத்தில் சக்திவேல் பணி-யாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ருத்-ராவின் தங்கை, தம்பி அடுத்தடுத்து இறந்தனர். இதனால் ருத்ரா மன உளைச்சலில் இருந்தார். மனைவிக்கு சக்திவேல் ஆறுதல் கூறி வந்துள்ளார்.இந்நிலையில் சக்திவேல் கடந்த 22 காலை வேலைக்கு சென்றார். இரவு வேலை இருந்ததால் வீட்டுக்கு செல்லவில்லை. மறுநாள் காலை 10:00 மணிக்கு மனைவியுடன் பேசியுள்ளார். 12:00 மணிக்கு போன் செய்த போது, ருத்ரா போனை எடுக்கவில்லை. அங்கிருந்தவர்கள் மூலம் பார்த்த போது ருத்ரா நைலான் கயிற்றில் துாக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. மனைவியை கீழே இறக்கி படுக்க வைத்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்து ருத்ரா இறந்ததை உறுதி செய்தனர்.சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Dec-2025