உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 3, 4ல் மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

வரும் 3, 4ல் மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி வரும் ஜூன், 3ல் திண்டல் வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், ஜூன், 4 முதல், 9 வரை, 6 நாட்களுக்கு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு யூனியன் அலுவலகம் அருகிலும் நடக்க உள்ளது.மகளிர் குழுவினர் செய்த கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சி பொருட்கள், காட்டன் பைகள், சணல் பை, மரச்செக்கு எண்ணெய், பாத்ரூம் கிளீனர் உட்பட பல்வேறு பொருட்கள், சிறுதானியங்கள், விளை பொருட்கள் விற்பனைக்கு வைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை