மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் ஷீட் ஒட்டும் பணி துவக்கம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிப்.,5ல் ஓட்டுப்ப-திவு நடக்க உள்ள நிலையில், நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் (இ.வி.எம்.,) 'பேலட் ஷீட்' ஒட்டும் பணி துவங்-கியது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 2 லட்சத்து, 27,546 வாக்காளர்கள் வரும் பிப்., 5ல் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். இத்தொகுதியில், 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்-வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, 3 இ.வி.எம்.,கள் பயன்படுத்தப்-படுகிறது.இதன்படி மொத்தமுள்ள, 237 ஓட்டுச்சாவடிகள் மற்றும் கூடுத-லாக, 20 சதவீதம் சேர்த்து, 852 இ.வி.எம்.,கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரம், 308 வி.வி.பேட் ஆகியவை தயார் நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்-ளன.கடந்த, 20ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 24ல் 'பேலட் ஷீட்' அச்சிடப்பட்டு, அவையும் பாது-காப்பு அறையில் வைக்கப்பட்டது. நேற்று காலை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், அவர்களது முக-வர்கள் முன்னிலையில், அந்த அறை திறக்கப்பட்டு, இ.வி.எம்.,கள், 'பேலட் ஷீட்' ஆகியவை எடுக்கப்பட்டன. மாநக-ராட்சி கூட்டம் நடக்கும் அறையில், இ.வி.எம்.,களில் 'பேலட் ஷீட்'கள் ஒட்டும் பணி துவங்கியது. வேட்பாளர் பெயர் - சின்னம் ஆகியவை கொண்ட 'பேலட் ஷீட்' ஒட்டப்பட்டன. இத்-தொகுதியில் உள்ள, 237 ஓட்டுச்சாவடிகள், 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா, 5 அலுவ-லர்கள், பணியாளர்கள் மூலம் ஒட்டும் பணி நடந்தது. அத்துடன், இயந்திரத்தின் பொத்தான் இயங்குகிறதா என்பதையும் சோதித்து உறுதி செய்து கொண்டனர். ஓட்டும் பணி முடிந்த இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் ஆகியவை பெட்டிகளில் வைத்து சீலிட்டு, மீண்டும் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்-றனர். 'சீல்' வைக்கும் பணிக்கு, போஸ்ட் ஆபீஸில் இருந்த, 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை பயன்படுத்துகின்றனர். இப்-பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என, அதிகாரிகள் தெரி-வித்தனர். இத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்-றுத்திறனாளிகள் என, 246 பேர் தபால் ஓட்டாக தங்கள் ஓட்டை பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் வரும் பிப்., 5ல் ஓட்டுப்பதிவு செய்து, வரும், பிப்., 8 ல் ஓட்டு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.