கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
அந்தியூர்:பர்கூர்மலை கொங்காடை, சுண்டபோடை சேர்ந்தவர் சித்தன், 37, கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர், சித்தனிடம் சோதனையிட்டனர். அவரிடம், 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். சித்தனை கைது செய்த போலீசார், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.