மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
24-Jul-2025
பெருந்துறை: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான் அன்சாரி, 23; பெருந்துறை அடுத்த கடப்பமடையில் தங்கி, பெருந்துறை சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று பணியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரத்தில் சிக்கி கொண்டார். இதில் இரு கால்களும் துண்டாகின. சக தொழிலாளர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jul-2025