உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு

ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் பூபதி, 37; தறி பட்டறை தொழிலாளி. இவர் மனைவி கனிமொழி, 32; குழந்தைகள் இல்லை. பூபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 1ம் தேதி நள்ளிரவில் குடிபோதையில் வீட்டுக்கு சென்ற பூபதி, மனைவியிடம் தகராறு செய்து விட்டு, தனது அறைக்குள் துாங்க சென்றவர், துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார். மனைவி கனிமொழி புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ