தொழிலாளி விபரீத முடிவு
ஈரோடு:குடி பழக்கத்துக்கு ஆளான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 62. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.முருகன் கூலி வேலைக்கும், பஞ்ச வர்ணம் ரைஸ்மில் வேலைக்கும் சென்று வந்தனர். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 10 ஆண்டுகளாக பிரிந்துவாழ்கின்றனர்.முருகன் குடி பழக்கத்துக்கு ஆளாகி, வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த, 19ல், பி.பி.அக்ரஹாரம், காவிரி ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.