உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கியதில் தொழிலாளி காயம்

யானை தாக்கியதில் தொழிலாளி காயம்

சத்தியமங்கலம்,தாளவாடி அருகே காவலுக்கு இருந்த தொழிலாளியை, யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.தாளவாடி அருகே பையன புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் சாரி, 54. இவர், மாதள்ளி பகுதியில் உள்ள பட்டு வளர்ச்சி பண்ணையில், பராமரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காவலுக்கு இருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஜீரஹள்ளி வனத்துறையினர், தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ