உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் சிக்கிய தொழிலாளி பயத்தில் வீட்டில் தற்கொலை

விபத்தில் சிக்கிய தொழிலாளி பயத்தில் வீட்டில் தற்கொலை

ஈரோடு:கொடுமுடி, சென்னசமுத்திரம், சாலைபுதுார் மேற்கு வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56; இவர் மனைவி செல்வி, 51; சிவகிரியில் இரும்பு கடையில் பன்னீர்செல்வம் வேலை செய்தார். கடந்த, 9ல் வீட்டுக்கு செல்வி உறவினர் மனோகரனுடன் மொபட்டில் அமர்ந்து சென்றார். வருந்தியாபாளையம் பிரிவு ரோட்டில் விபத்து ஏற்பட்டதில் மனோகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் செல்வி எழுந்து பார்த்தபோது பன்னீர்செல்வம் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். உறவினர் உதவியுடன் கணவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விபத்து பயத்தில் கணவன் துாக்கிட்டு கொண்டதாக செல்வி அளித்த புகாரின்படி, கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி