உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி, சிற்பி விபத்தில் பலி

தொழிலாளி, சிற்பி விபத்தில் பலி

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகேயுள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சேதுபதி, 55; பல்லடம் பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் இரவுப்பணி முடிந்து ஹோண்டா சைன் பைக்கில், நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். முத்துார்-காங்கேயம் ரோட்டில் வரட்டுக்கரை என்ற இடத்தில், அடையாளம் தெரியாத வாகனம் சேதுபதி மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.* ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள வேமாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் 40; சிற்ப கலைஞர். பைக்கில் எம்மாம்பூண்டி என்ற இடத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார். எதிரே நம்பியூர், மொட்டணம், பழையூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிவா, 26, ஆம்னி வேனில் வந்தார். உறவினர்களுடன் திருப்பூருக்கு சித்த மருத்துவ சிகிச்சைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக சுரேஷ் பைக் மீது வேன் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்தில் பலியானார். வரப்பாளையம் போலீசார் காரை ஓட்டிய சிவாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி