வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி மாயம்
கோபி: கோபி அருகே குட்டகம் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 55, கட்டட தொழிலாளி; இவரின் மனைவி கலாமணி, 48; இரு-வரும் உக்கரம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில், துணி துவைக்க நேற்று மதியம் 2:30 மணிக்கு சென்றனர். அப்போது வாய்க்காலில் இறங்கி குளித்த முத்துசாமி தண்ணீரில் மூழ்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சித்தும் முடியவில்லை. சத்தி தீய-ணைப்பு துறையினர், இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.