உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளிவிபரீத முடிவுதாளவாடி, டிச. 25-தாளவாடி அருகேயுள்ள மரியபுரத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ், 51, கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்டவர். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் போதையில் சண்டை போட்டதில், மனைவி செல்வி கோபித்துக்கொண்டு, அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால் ஜேம்ஸ் கதவை தாழிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி தாளவாடி போலீசார் சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ