உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

கோபி,கவுந்தப்பாடி அருகே பெருமாபாளையம் குடியிருப்பை சேர்ந்தவர் பிரபாகரன், 36, கட்டட தொழிலாளி; மனைவி, மகன், மகளுடன் தென்னங்கீற்றுடன் கூடிய தகர சீட் வேய்ந்த குடிசையில் வசிக்கிறார். தம்பதியர் நேற்று காலை வேலைக்கும், மகன், மகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் காலை, 9:00 மணிக்கு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தாலும் குடிசை மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து நடந்ததாக, கவுந்தப்பாடி போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி