மேலும் செய்திகள்
வேலை உறுதி திட்டத்தில் ரூ.700 கூலி வழங்கணும்!
16-Dec-2025
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் யூனியன் சதுமுகை பஞ்.,ல், ஒரு மாதமாக நுாறு நாள் வேலை வழங்கப்படாததை கண்டித்து, பஞ்., அலுவலகத்தை தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமை வகித்தார். மேலும் திட்டத்தின் பெயரை, புஜியா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என மாற்றும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த திட்டத்தை சிதைக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினர். மூன்று மணி நேரம் நீடித்த போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தொழிற்சங்க தலைவர்கள் ஸ்டாலின் சிவக்குமார், சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
16-Dec-2025