உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உடற்கல்வி, தற்காப்பு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

உடற்கல்வி, தற்காப்பு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும், ஈரோடு மாவட்ட அரசு குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கு, கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி அளிக்க பயிற்சியாளர் நியமனம் செய்யப்படவுள்ளனர். கராத்தேவில் பிளாக் பெல்ட் மற்றும் டிப்ளமோ பட்டயப்படிப்பு படித்தவர் விண்ணப்பிக்கலாம். 9,000 ரூபாய் சம்பளம். உடற்கல்விக்கு இளநிலை படிப்பு (பி.பி.எட்.,) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஊதியம், 15,000 ரூபாய்.இரு இடங்களுக்கும் தலா ஒருவர் தேர்வு செய்யப்படுவர். வரும், 15ம் தேதிக்குள், கலெக்டர் அலுவலகத்தில் ஆறாவது தளத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை