உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சலுகை விலை அறிவிப்பால் குவிந்த இளைஞர்கள் ரெடிமேடு ஷோரூம் திறப்புவிழாவில் தள்ளுமுள்ளு

சலுகை விலை அறிவிப்பால் குவிந்த இளைஞர்கள் ரெடிமேடு ஷோரூம் திறப்புவிழாவில் தள்ளுமுள்ளு

ஈரோடு: ஈரோட்டில் காந்திஜி சாலையில், புதியதாக ரெடிமேடு கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பேண்ட், டி-ஷர்ட், லேடீஸ் டாப்ஸ் சலுகை விலையில் தருவதாக அறிவித்தனர். இதனால் காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் கடை முன் குவிந்தனர். துணிக வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேசமயம் கூட்டத்தால் காந்திஜி சாலை, பழைய பூந்துறை சாலையில் போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையறிந்து சென்ற போக்குவரத்து மற்றும் டவுன் போலீசார், மக்களை வரிசைப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்களை மட்டும் கடைக்குள் அனுமதித்தனர். சாலையோரம் கடை திறப்பு விழா மேடை அமைக்க, சலுகை அறிவிப்பால் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக, தங்களிடம் எவ்வித அனுமதியும், ஜவுளிக்கடை நிர்வாகத்தினர் பெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ