மேலும் செய்திகள்
மாகாளியம்மனுக்கு ஆடி திருவிழா நாளை துவக்கம்
15-Jul-2025
ஈரோடு, திங்களூர் நடுப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருப்புசாமி மகன் மூர்த்தி, 30. இவர் தன்னுடைய மனைவி சுகன்யாவை, கரூரில் உள்ள மாமனார் வீட்டில் விட்டு விட்டு, பல்சர் பைக்கில் கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு கிரே நகரில் இருந்து விஜயமங்கலம் சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் வேகமாக வந்து பைக் மீது மோதியது. இதில் மூர்த்தி பலத்த காயமடைந்தார். பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று இறந்தார். திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Jul-2025