உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ.,வில் இணைந்த இளைஞர்கள்

பா.ஜ.,வில் இணைந்த இளைஞர்கள்

சென்னிமலை: திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலையில், இளைஞர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் தயாநிதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வசந்தராஜன் பங்கேற்றார். இதில் சென்னிமலை, காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம் ஒன்றியங்களை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை