உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருவிழாவில் மோதல் 11 பேர் மீது வழக்கு

திருவிழாவில் மோதல் 11 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார்:திருக்கோவிலூர் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலூர் அடுத்த துலாம்பூண்டி, மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி நடந்தது.இதில் அதே ஊரைச் சேர்ந்த முத்துலிங்கம், 60; அவரது ஆதரவாளர்களான ஆறுமுகம் மகன் சங்கர், 45; குப்புசாமி மகன் பாண்டியன், 30; அவரது தம்பி சிவா, 22; உள்ளிட்ட ஆறு பேர், எதிர் தரப்பைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜயகுமார், 45; கோவிந்தன் மகன் மூர்த்தி, 52; ஆறுமுகம் மகன் திருமலை, 44; உள்ளிட்ட ஐந்து பேர் என இரு தரப்பினரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை பாடுமாறு கூறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கோவிலூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சோலை, நடராஜன், சந்தியாகு மற்றும் போலீசார் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் புகாரின் பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை