உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயியிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவர் மீது வழக்கு

விவசாயியிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் தாலுகா, நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முனியன்,36; இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.8.60 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். 3 மாத தவணை தொகை செலுத்திய முனியன், அதற்கு பிறகு தவணை தொகை செலுத்தவில்லை. இதனால், நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் டிராக்டரை எடுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து, முனியன் ரூ.6.30லட்சம் செலுத்திய நிலையில், டிராக்டர் தராமல் இருந்துள்ளனர்.இது குறித்து முனியன் கேட்டதற்கு பணம் செலுத்தவில்லை என நிதி நிறுவன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன், ரமேஷ் ஆகியோர் தன்னிடம் பணத்தை பெற்று, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் ஏமாற்றி விட்டதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் முனியன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மணிகண்டன், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை