| ADDED : ஜூன் 11, 2024 07:04 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெறும் அரசு அலுவகங்களில் 10 ரூபாய் நாணயம் பெறப்படும் என்ற அறிவிப்பு பலகையை வைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே உள்ளது. அதற்கேற்ப பெட்ரோல் பங்குகள், பஸ்கள், டோல்கேட், கடைகளில் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தனர்.ஒரு சில வங்கிகளில் கூட 10 ரூபாய் நாணயம் பெற மறுப்பதாக புகார் உள்ளது.இது போன்ற காரணங்களால், 10 ரூபாய் நாணயத்தின் புழக்கம் குறைவாக இருந்தது. குறிப்பாக, ஒரு சிலர் நாணயத்தை வாங்க மறுக்கும் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.இந்நிலையில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரித்தார். இது தொடர்பாக பிரசுரமான செய்திதாள் நகல்களை வணிகர்கள் சிலர் கடையில் ஒட்டினர். ஆனாலும், ஒரு சில இடங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை என்ற புகார் நீடித்து வருகிறது.இது குறித்து வணிகர்கள் தரப்பில் கூறுவதாவது: வாடிக்கையாளர்கள் தரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குகிறோம், ஆனால் நாங்கள் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் வாங்க மறுக்கிறார்கள், குறிப்பாக சில கடைகள், வங்கி மற்றும் பஸ்களில் நாணயம் வாங்க மறுக்கின்றனர் என வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.எனவே, கலெக்டர் ஷ்ரவன்குமார் 10 ரூபாய் நாணயத்தை பெறுவோம் என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப்பு பலகையை வங்கிகள், பஸ் டெப்போ, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெறும் அலுவலகங்களில் வைக்க உத்தரவிட வேண்டும்.