உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில்கள் பதுக்கல் தப்பியோடியவருக்கு வலை

மது பாட்டில்கள் பதுக்கல் தப்பியோடியவருக்கு வலை

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் 240 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள வாரம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டின் பின்புறம் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடன், அவரை பிடிக்க முயன்ற போது தப்பியோடினார்.அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த 120 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 120 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து முருகேசனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி