உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நடந்து சென்ற பெண் வேன் மோதி பலி

நடந்து சென்ற பெண் வேன் மோதி பலி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதியதில் நடந்து சென்ற பெண் இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம், ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி சுமதி, 45; இவர், நேற்று காலை 6:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருவண்ணாமலையிலிருந்து, திருக்கோவிலுார் நோக்கி வந்த மகேந்திரா பிக்கப் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த விளம்பர பலகையின் மீது மோதி, சுமதி மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை