மேலும் செய்திகள்
குழந்தையுடன் இளம்பெண் மாயம்
23-Aug-2024
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்த சரவணன் மனைவி அருணா,24; இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான சரவணன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருவதால் கடந்த ஒரு வருடமாக பாண்டியங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் அருணா குழந்தைகளுடன் வசித்து வந்தார்.கடந்த 30 ம் தேதி பகல் 2 மணியளவில் அருணா, திட்டக்குடி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர்.அதன் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Aug-2024