உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாய அடையாள அட்டை; மேலுாரில் சிறப்பு முகாம்

விவசாய அடையாள அட்டை; மேலுாரில் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி; மேலுார் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகள் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கபட உள்ளது.இதற்கான சிறப்பு முகாம், இந்திலி அடுத்த மேலுார் ஊராட்சியில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பொன்னுராசன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் விவசாயிகளுக்கான தனி அடையாள அட்டை வழங்கும் பணியை துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் விவசாயிகள் தங்களுடைய ஆதார், நிலப்பட்டா, சிட்டா, மொபைல் எண் ஆகியவற்றை நேரடியாக வழங்கி பதிவு செய்தனர். முகாமில் வி.ஏ.ஓ., நிவேதா, இல்லம் தேடி கல்வி அலுவலர் ஆனந்தி, மகளிர் திட்ட அலுவலர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை