மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
02-Sep-2024
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சொத்துக்காக தாய் மற்றும் அக்காவை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் சேர்ந்த அமனுல்லா மனைவி ஜெய்த்உன்பீ,50; இவர் தனது மகள் ஜாஸ்மின்பானு,30;வுடன் வசித்து வருகிறார்.இதனையடுத்து தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஜெய்த்உன்பீ தனது மகள் ஜாஸ்மின்பானுவுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் சமீர் கடந்த 2ம் தேதி அவரது வீட்டிற்கு சென்று தாய் ஜெயத்உன்பீ, சகோதரி ஜாஸ்மின்பானு ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து தாய் ஜெயத்உன்பீ கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் சமீர்,28; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2024