உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புளிய மரத்தில் பைக் மோதி ஒருவர் பலி

புளிய மரத்தில் பைக் மோதி ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி ; சின்னசேலம் அருகே சாலையோர புளிய மரத்தில் பைக் மோதி ஒருவர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் சேர்ந்தவர் பாண்டு மகன் மாரிமுத்து, 40. இவர் 25ம் தேதி இரவு 11:00 மணியளவில் பைக்கில் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ