உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.77.28 லட்சம் வர்த்தகம் 

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.77.28 லட்சம் வர்த்தகம் 

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 77.28 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து 900 மூட்டை, 400 மக்காச்சோளம், கம்பு 60, மணிலா 5, எள் 4, வரகு 2, தலா ஒரு மூட்டை தட்டைப்பயிர், வரகு, பச்சைப்பயிர், துவரை என 1,374 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை உளுந்து 7330 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,356, வேர்க்கடலை 9,756, கம்பு 2,495, எள் 12,189, வரகு 2,073, தட்டைப்பயிர் 4,609, பச்சைப்பயிர் 7,424, துவரை 3,699 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. கமிட்டியில் மொத்தமாக 77 லட்சத்து 28 ஆயிரத்து 211 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 11 மூட்டை, வரகு 2, தலா ஒரு மூட்டை உளுந்து, தட்டைப்பயிர் என மொத்தம் 64 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,312, வரகு 2,109, உளுந்து 6,093, வரகு, தட்டைப்பயிர் 4,013 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டன. மொத்தமாக ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 603 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 756 மூட்டை, உளுந்து 190, கம்பு 29, தலா ஒரு மூட்டை மக்காச்சோளம். ராகி என மொத்தம் 981 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. சராசரியாக நெல் 2155,, உளுந்து 7,329, மக்காச்சோளம் 2,200, ராகி 2,425 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 30 லட்சத்து 98 ஆயிரத்து 852 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ