மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
05-Mar-2025
உளுந்துார்பேட்டை: தனியார் பள்ளியில் மின் மோட்டார் கேபிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பாண்டுரங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 66; இவர் காட்டுநெமிலி அ.குரும்பூர் ரோடு அருகே புதியதாக பள்ளி கட்டடம் கட்டி வருகிறார். அவரது மகன் கமலக்கண்ணன், நேற்று முன்தினம் காலை அங்கு மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது, மோட்டாருக்கு செல்லும் மின் கேபிள் திருடு போயிருந்தது.புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பள்ளியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், கேபிள் திருடிய விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுாரை சேர்ந்த அண்ணாதுரை மகன் தமிழ்ச்செல்வன்,28; என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர் மீது விருத்தாசலம் போலீசில் மாடு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
05-Mar-2025