உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: நிலம் பிரச்னை தொடர்பான முன்விரோத தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சுந்தர்ராஜன், 26; அதே ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன், 50; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறில், கடந்த 20ம் தேதி கோவிந்தன் அவரது மகன் சரவணகுமார், 27; இருவரும் சுந்தர்ராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இந்த மோதலில் சுந்தர்ராஜன், அவரது மனைவி பரமேஸ்வரி, 23; அண்ணன் முனியப்பன், 31; தம்பி மோகன், 25; ஆகியோர் கோவிந்தனை திருப்பித் தாக்கினர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், சுந்தர்ராஜன் உட்பட 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ