மேலும் செய்திகள்
பைக் மோதி மெக்கானிக் பலி
28-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட விவகாரத்தில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சிலம்பரசன்,32; இவரது மொபைல் போன் திருடு போனது. இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த தங்கமணி,53; என்பவரிடம் விசாரித்தார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்,ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Feb-2025