உள்ளூர் செய்திகள்

சாகை வார்த்தல்

ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் சாகை வார்த்தல் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. கடந்த 26ம் தேதி நடந்த ஊரணி பொங்கல் நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சாகை வார்த்து, பொதுமக்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை