மேலும் செய்திகள்
கச்சிராயபாளையம் அருகே விவசாயிகள் சங்க கூட்டம்
03-Mar-2025
கச்சிராயபாளையம்: வடக்கனந்தல் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது.கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம். எல். ஏ., தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் நடராஜன், துணைத் தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ரஞ்சித் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் கலெக்டர் பிரசாந்த் பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து 10.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிதாக வாங்கப்பட்ட டிராக்டர் மற்றும் பேட்டரி வாகனங்களை கொடியசைத்து துவங்கி வைத்தனர்.மேலும், நீர்வளத்துறை சார்பில் கச்சிராயபாளையம் ஏரி வரத்து வாய்க்காலில் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் 3.29 கோடி ரூபாய் மதிப்பில் வாய்க்கால் துார்வாரி, வெள்ள தடுப்புச் சுவர் அமைத்து, கரைகளை பலப்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது.நிகழ்ச்சியில் சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், உதவி பொறியாளர் விஜயகுமரன், பணி ஆய்வாளர் ராஜமோகன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், கோமுகி அணை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Mar-2025