| ADDED : மே 30, 2024 04:24 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் புழங்குவதால், மக்கள் உஷராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றனர்.இந்த கள்ள நோட்டில், 'Reserve bank' என்பதற்கு பதிலாக 'Resurve bank' என அச்சிடப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது, மேற்கண்ட 'Reserve bank' என உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். மேலும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவோர் பற்றி தகவலறிந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்குமாறு சங்கராபுரம் போலீசார் அறிவித்துள்ளனர்.