உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாகலுாரில் ரூ.56.47 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி, விடுதி கட்டுமானம் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு 

நாகலுாரில் ரூ.56.47 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி, விடுதி கட்டுமானம் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு 

கள்ளக்குறிச்சி : நாகலுாரில் 56.47 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதி கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுாரில் நபார்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை மூலம் புதிய மாதிரி பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டுமான பணிகள் 56.47 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தபின் கூறியதாவது:மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், புதிய கட்டடங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது நாகலுாரில் 19.33 கோடி ரூபாயில் மாதிரி பள்ளி, 37.14 கோடி ரூபாயில் தனித் தனியாக மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டப்பட்டு வருகிறது.இதில், மாணவியர் விடுதி யில் 392 பேர் தங்கி பயிலும் வகையில் 4 தளங்களில் மாணவிகள் தங்கும் அறைகள், காப்பாளர் அறை, சாப்பாட்டு கூடம், சமையல் அறை, பொருட்கள் வைப்பறை, 2 லிப்ட் என பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.அதேபோல் மாணவர் விடுதியும் கட்டப்படுகிறது. தற்போது 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முழுமையாக பணி முடிந்ததும், தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மாதிரி பள்ளி சொந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயல்படும்.மேலும், மாதிரி பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.பொதுப் பணித்துறை உதவி பொறியாளர்கள் இமாம்ெஷரீப், ராஜேஷ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை