உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் பொருளாதார மேம்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்

கல்வராயன்மலையில் பொருளாதார மேம்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்

கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டம் உருவாக்கம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கல்வராயன் மலை மக்கள் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை வரவேற்றார். அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கல்வராயன் மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பழங்குடியினரின் தேவைகள் குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கல்வராயன் மலையில் கல்வி, சுகாதாரம், பட்டா, வேளாண்மை, தொலைதொடர்பு வசதிகள், சுய தொழில் வாய்ப்புகள், நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை நிகழ்வுகள் குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம், கால்நடைத்துறை உதவி இயக்குனர் கந்தசாமி, ஒன்றிய சேர்மன் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை