உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் வீரசாமி, ஏழுமலை, வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 42 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் முழு மருத்துவ செலவு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை