| ADDED : மே 20, 2024 06:38 AM
சங்கராபுரம், : சங்கராபுரம் அருசு பாலிடெக்னிக் கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (20 ம் )தேதி கடைசி நாளாகும்.சங்கராபுரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் சிவில், மெக்கானிக், மின்னியல்,மின்னணுவியல், கணினி அறிவியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.இக் கல்லுரியில் சேர்ந்து படிக்க ஆண்டு கட்டணம் ரு.2200. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் உதவித்தொகை, மகளிருக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதந் தோறும் ரு.1000, இலவச பஸ் பயண அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படுகிறது.தற்போது ஐ.டி.ஐ., மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ,மாணவிகள் நேரடியாக 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்பிக்க இன்று (20ம் தேதி) கடைசி நாளாகும். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதலாமாண்டில் சேரலாம்.இதற்கு விண்ணப்பிக்க 24 ம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்ப கட்டணம் ரு.150 மட்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியிணருக்கு விண்ணப்ப கட்டணம் இலவசம்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சே்ர்ந்த மாணவ மாணவிகள் இக்கல்லுரியில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட கலைக்டர் ஷ்ரவன்குமார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.