உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்பனை; தி.மு.க., நிர்வாகி கைது 

மதுபாட்டில் விற்பனை; தி.மு.க., நிர்வாகி கைது 

ரிஷிவந்தியம் : நுாரோலையில் மதுபாட்டில் விற்ற தி.மு.க., கிளை செயலாளரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நுாரோலை டாஸ்மாக் கடை அருகே சின்னப்பையன் மகன் முருகையன்,56; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து முருகையனை கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான முருகையன் தி.மு.க., கிளை செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.அதேபோல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிகுரூஸ் மற்றும் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியில் போது, ரிஷிவந்தியத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் சேட்டு, இவரது மனைவி கலையரசி ஆகியோர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதில், கலையரசியை கைது செய்து அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சேட்டுவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !