தி.மு.க., ஒன்றிய சேர்மன் இல்ல திருமண விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தி.மு.க., ஒன்றிய சேர்மன் இல்ல திருமண விழாவை அமைச்சர் வேலு தலைமை தாங்கி நடத்தி வைத்தார். கள்ளக்குறிச்சி தி.மு.க., வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம்- ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தம்பதியின் மகள் சந்தியா, அகரகோட்டாலம் முருகேசன்- தனம் தம்பதியின் மகன் பாலாஜி ஆகியோரது திருமண விழா நேற்று நடந்தது. மாடூர் ஏ.என்.பி., மகாலில் நடந்த விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தலைமை தாங்கி் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, மலையரசன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பிரசாந்த், திட்ட இயக்குனர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், ஆறுமுகம், சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், வைத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், நகராட்சி சேர்மன்கள் சுப்ராயலு, திருநாவுக்கரசு, தொழிலதிபர் செந்தில்குமார், ஒன்றிய சேர்மன்கள் திகவலதி நாகாராஜன், ராஜவேல், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஒன்றிய செயலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.