உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம் 9 நாட்களில் 44 புகார்களுக்கு தீர்வு

குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம் 9 நாட்களில் 44 புகார்களுக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக 24 மணிநேர புகார் கட்டுப்பாட்டு மையத்தில், கடந்த 9 நாட்களில் 68 புகார்கள் பெறப்பட்டு, அதில் 44 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.இதையொட்டி, குடிநீர் தொடர்பான பிரச்னைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மாவட்ட அளவிலான குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டது.பொதுமக்கள் தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் தொடர்பான புகார்களை 04151- 222001, 222002 ஆகிய எண்களில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. புகார் மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 9 முதல் 16ம் தேதி வரை வரப்பெற்ற புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.அதில், குடிநீர் பற்றாக்குறை, சரியான நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யாதது, குடிநீர் குழாய்களை நீட்டிப்பு செய்தல், புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல் உட்பட பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.திருக்கோவிலுார், சின்னசேலம், கல்வராயன்மலை ஆகிய ஒன்றியங்களில் இருந்து 15 புகார்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.இதேபோல், கடந்த 9 நாட்களில் மாவட்டம் முழுவதும் 68 புகார்கள் பெறப்பட்டது. அதில், 44 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 24 புகார் நிலுவையில் உள்ளது.பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் புகார்களை குறைதீர் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ