உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

கச்சிராயபாளையம்; தெங்கியாநத்தம் கிராமத்தில் லாரி மோதி விபத்தில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். கச்சிராயபாளையம் அடுத்த கெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி 74; இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில் சின்னசேலம் நோக்கி பைக்கில் மடத்துக்காடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன்; என்பவர் ஓட்டி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி