மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
திருக்கோவிலுார்:' திருக்கோவிலுார் கோட்ட மின்துறை சார்பில் துறிஞ்சிப்பட்டு அரசு நடுநிலை பள்ளியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில் உதவி மின் பொறியாளர் சம்பத் ராஜன் வரவேற்றார். உதவி மின் பொறியாளர்கள் ராஜா, சிவகுமார் முன்னிலை வகித்தனர்.உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, மின் சிக்கனம், அதன் அவசியம், பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.ஏற்பாடுகளை மின் முகவர் சேகர், கம்பியாளர்கள் ரகோத்தமன், கோவிந்தராஜ் செய்திருந்தனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்னர். இதேபோல் திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் விழிப்புணர் முகாம் நடந்தது.