தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார்.மாவட்ட தொழில் முனை வோர் ஒருங்கிணைப்பா ளர்கள் கள்ளக்குறிச்சி அறிவொளி, கவுதம், சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.தொழில் வழிகாட்டு முறைகள், வாய்ப்புகள், முதலீடுகள், அரசு சார்பில் கிடைக்கும் உதவிகள், தொழில் செய்து வெற்றி பெறுவது என்பன உள்ளிட்ட கருத்துரைகளை வழங்கினர். மாணவ, மாணவிகள், கல்லுாரி துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி கணினி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.