மேலும் செய்திகள்
டிரைவர்களுக்கு கண் பரிசோதனை
02-Sep-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப், பாரஸ்மல் ஜெயின் அறக்கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோதம்சந்த் முன்னிலை வகித்தார்.கோவை சங்கரா கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்ற 150 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 50 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெய்சந்த், சுனில்குமார், அரியந்த், ரோட்டரி சங்க சாசன தலைவர் வாசன், சங்க உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, மகாவீர்சாந்த், ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
02-Sep-2024