அனுமதியின்றி கொடிகம்பம்; பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே அனுமதியின்றி பா.ஜ., கொடி கம்பம் அமைத்த நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் செல்வராசு. பா.ஜ., நிர்வாகியான இவர் கருந்தலாக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் எவ்வித அரசு அனுமதியின்றி பா.ஜ., கொடி கம்பம் அமைத்துள்ளார். இது குறித்து அறிந்த வி.ஏ.ஓ., ரங்கசாமி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கீழ்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பா.ஜ., நிர்வாகி செல்வராசு மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.