மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
7 hour(s) ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
7 hour(s) ago
கள்ளக்குறிச்சி : முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், வரும் 29ம் தேதியில் இருந்து இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கை: 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வரும் செப்., மாதம் துவங்க உள்ளது. ஓராண்டு கால பயிற்சி, 2 பருவ முறைகளில் நடைபெற உள்ளது. பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் வரும் 29ம் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து, www.tncuicm.comஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேருவதற்கான தேதி, நிபந்தனைகள், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் இணையவழியில் வெளியிடப்படும். மேலும், விபரங்களை விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், விழுப்புரம், கதவு எண்.2/1006, எல்லீஸ்சத்திரம் சாலை, திருச்சி மெயின்ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் 605 401 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், மேலாண்மை நிலைய முதல்வர்(பொ) 88259 28327, அலுவலக எண், 04146 259467 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என கூறப்பட்டுள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago