உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / களைக்கொல்லி குடித்து சிறுமி தற்கொலை

களைக்கொல்லி குடித்து சிறுமி தற்கொலை

கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனுாரில் வயிற்று வலியால் களைக்கொல்லி மருந்தை குடித்து சிறுமி தற்கொலை செய்த கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் பூஜா, 14; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.பெற்றோரை இழந்த இவரை அவரது பெரியப்பா அம்பாயிரம் பராமரிப்பில் இருந்து வந்தார். பூஜாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம்.கடந்த 22ம் தேதி வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை